Sunday, November 5, 2023
சத்தியமங்கலம் செய்திகள்
திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடைக்கு மேல் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடையை மீறினால் குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும அதற்கு மேல் ஒரு டன் எடைக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.தமிழ்நாடு கர்நாடக ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கிய மலைப்பாதை உள்ளது.த மலைப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றம் உத்தரவு படி திம்பம் மலைப்பாதையில் 6,10,சக்கர லாரிகள் மற்றும் மொத்த எடை 16.2 டன் எடையுள்ள சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் எனவும் கனரக வாகனங்களுக்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டதுஆனால் கடந்த சில மாதங்களாக வனத்துறையினர் 20 டன்னுக்கு மேல் ஏற்றி வரும் சில சரக்கு லாரிகளை அனுமதிக்க படுவதாக புகார் எழுந்தது.தனை அடுத்த திம்பம் மலைப்பாதை லாரி ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர் சங்கம் சார்பில் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் சரக்கு லாரிகளை அனுமதிக்க வேண்டும் என கோரி சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் மற்றும் ஆசனூர் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலகம் முன்பு கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.இதனை அடுத்து சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஆசனூர் வனக்கோட்டம் வனத்துறையினர் கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் தாளவாடி வனத்துறையினர் நேற்று காலை முதல் கர்நாடக மற்றும் தாளவாடி இருந்துஅதிக பாரம் ஏற்றி கொண்டு சத்தியமங்கலம் நோக்கி ஆசனூர் வழியாக செல்லும் சரக்கு வாகனங்களை வனத்துறையினர் தடுத்து நிறுத்தி ஆசனூரில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட எடை மேடையில் சரக்கு வாகனங்கள் அனைத்தையும் எடை சரிபார்க்கப்பட்டது.தில் நீதி மன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி 16.2 டன்னுக்கு மேல் ஒரு டன் எடை அதிகமாக இருந்தாலும் அந்த வாகனத்திற்கு குறைந்த பட்சம் 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் அதற்கு மேல் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு ஒரு டன்னுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.அதுமட்டுமல்லாமல் அதிக எடையுடன் அனுமதி மறுக்கப்பட்டு மாற்று வாகனத்தில் சரக்குகளை மாற்றி ஏற்றி செல்ல வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது குறித்து கோபிசெட்டிபாளையம் மோட்டார் வாகன ஆய்வாளர் திம்பம் மலைப்பாதையில் நீதிமன்றம் உத்தரவு படி 16.2 டன் எடையுள்ள சரக்கு வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அனுமதியை மீறி அதிக பாரம் ஏற்றி வரும் வாகனங்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
சத்தியமங்கலம் செய்திகள்
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...
-
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...
-
தாளவாடி அருகே கும்டாபுரம் கிராமத்தில் சாணியடி வினோத திருவிழா நடைபெற்றது. தமிழக கர்நாடக மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண...
-
கல்கடம்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ஈரோடு மாவட்டம் ...

நியூஸ்
ReplyDelete