Sunday, November 12, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

சத்தியமங்கலம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து 4 இளைஞர்கள் உயிரிழப்பு 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள பங்களாபுதூர் சதுமுகை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் நேற்று இரவு திரைப்படம் பார்த்து விட்டு திரும்பி வருகையில் இரவு 2.30 மணியளவில்  சத்தியமங்கலம் அருகே உள்ள வேடசின்னானூர் கிராமம் அருகே உள்ள ஒரு புளிய மரத்தில் அதிவேகமாக கார் பயங்கரமாக மோதியது. 

இதில் சம்பவ இடத்திலேயே மூன்று பேர் உயிரிழந்தனர். காயமடைந்த இரண்டு பேர் மீட்கப்பட்டு, கோபி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் ஒருவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் பங்களாபுதூர் குள்ளப்பநாயக்கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கீர்த்திவேல்துரை, பங்களாபுதூர்  கிராமத்தைச் சேர்ந்த மயிலானந்தன், சதுமுகை கிராமத்தைச் சேர்ந்த பூவரசன்,  ராகவன் ஆகிய நான்கு பேர் உயிரிழந்தனர். 

காரை ஓட்டி வந்த இளையராஜா என்பவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். திரைப்படம் பார்த்துவிட்டு ஊருக்கு திரும்பி கொண்டு இருந்த பொழுது இந்த கோர விபத்து நடந்துள்ளது. சத்தியமங்கலம் பகுதியில் இன்று அதிகாலையில் நடந்த இந்த கோர விபத்தில் சிக்கிய நான்கு பேரும் இளைஞர்கள் ஆவார்கள். விபத்தில் இருந்த நான்கு பேர் குடும்பத்தினரும் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இப்பகுதியில் நடந்த இந்த கோர விபத்தினால் பெரும் சோகம் ஏற்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

சத்தியமங்கலம் செய்திகள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...