Thursday, November 9, 2023

சத்தியமங்கலம் செய்திகள்

 உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது ஏன்..


இதை கண்டித்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் மாநாடு நடைபெறும் 

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் 












ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டியில் ஈரோடு மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் தலைமையில் மாநில செயலாளர் செந்தில் முன்னிலையில் நடைபெற்றது இதில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புஞ்சை புளியம்பட்டி பவானிசாகர் கோபிசெட்டிபாளையம் நம்பியூர் உட்பட்ட பகுதியை சேர்ந்த இந்து முன்னணி மாவட்டம் நகரம் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஜனவரி 26 ம் தேதி மாநாடு நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றது. 

இதனை தொடர்ந்து மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் செய்தியாளர் சந்திப்பின்போது போது புஞ்சை புளியம்பட்டி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான கடை வாடகை பல ஆண்டுகளாக வசூல் செய்யாமல் வாடகை பணம் நிலுவையில் உள்ளது இதனை இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு வாடகை பணத்தை வசூலிக்க வேண்டும்

சென்னிமலை முருகன் கோவிலில் ஜனவரி 1ம் தேதி வேல் வழிபாடு திருவிழா  நடைபெற்று வேல் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்ல உள்ளது.இதனை இந்து முன்னணி ஆதரவு தர உள்ளது இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

உதயநிதி ஸ்டாலின் சனதானம் குறித்து பேசியது கருத்து சுதந்திரம் என்றால் புஞ்சை புளியம்பட்டியில் விநாயகர் சதுர்த்தி அன்று இந்து முன்னணி நிர்வாகிகள் பேசிய கருத்துக்கு மட்டும் காவல் துறை கைது செய்தது சிறையில் அடைத்தனர்.


விடுதலை சிறுத்தைகள் கட்சி திமுக ,திக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி போன்ற கட்சியினர் கருத்து சுதந்திரம் குறித்து யாரும் பேச வில்லை


புஞ்சை புளியம்பட்டியில் லாட்டரி சீட்டு மதுபாட்டில்கள் விற்பனை போன்ற சட்ட விரோத செயல்கள் தொடர்ந்து நடை பெற்று வருகிறது இதனை காவல்துறை அதிகாரி தடுத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்


இதை கண்டித்து வரும் ஜனவரி 26 ம் தேதி புஞ்சை புளியம்பட்டியில் மாநாடு நடைபெற்றது என தெரிவித்தார்.


No comments:

Post a Comment

சத்தியமங்கலம் செய்திகள்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி ஆதரவற்ற முதியவர்களுக்கு மதிய உணவு ஈரோடு வடக்கு மாவட்டம் ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் வழங்கப்...