ஈரோடு மாவட்டம் மாவோயிஸ்ட் தடுப்பு சிறப்பு தனிப்பிரிவு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஈரோடு அவர்களின் உத்தரவுப்படி மாவட்ட காவல்துறை மற்றும் ரோட்டரி கிளப், தாளவாடி ஹில்ஸ், ரோட்டரி திருப்பூர் விஷன் சார்பாக ஆசனூர் காவல் நிலைய சரகம் ஒர்த்தி & V.M. தொட்டி ஆகிய ST கிராமங்களில் உள்ள 80 குடும்பங்களுக்கு
பூதாளபுரம் துவக்கப் பள்ளி வளாகத்தில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தவும், மலை கிராமத்தில் விழிப்புணர்வு மற்றும் கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குதல், தீபாவளி பட்டாசு இனிப்பு வழங்குதல் ,பள்ளி குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் , டிபன் பாக்ஸ் , வழங்கப்பட்டது. விழாவில் தாளவாடி காவல் ஆய்வாளர், ஆசனூர் உதவி ஆய்வாளர், கேர்மாளம் வனவர், ஈரோடு மாவட்ட நக்சல் தடுப்பு பிரிவு போலீசார், STF நுண்ணரிவு பிரிவு தலைமை காவலர், மாவட்ட கவுன்சிலர் ,தாளவாடி ரோட்டரி, திருப்பூர் விஷன் ரோட்டரி தலைவர்கள் , உறுப்பினர்கள் , சத்தி NPTM கோபு , ஆடிட்டர் திருமதி அமுதா அவர்கள் , ஊர் தலைவர்கள் மாரி, பொன்னான் மற்றும் ஊர் மக்கள் கலந்து கொண்டதில் நக்சல் மாவோயிஸ்டுகள் பற்றிய விழிப்புணர்வு செய்தும் விழா துவக்கப்பட்டது ,
மேலும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்பட்ட நலத்திட்ட உதவி பொருட்கள் விபரம்:
1) இனிப்பு (லட்டு) - 1/2 கிலோ
2) காரம் (மிக்சர்) - 1/2 கிலோ
3) பட்டாசு - 1 பெட்டி
4) வேஷ்டி - 1
5) சேலை - 1
5) பாய் - 1
6) தலையணை - 1
7) பிளாஸ்டிக் குடம் - 1
8) பிளாஸ்டிக் பக்கெட் - 1
9) பள்ளி குழந்தைகளுக்கு டிபன் பாக்ஸ் - 30
10) பள்ளி குழந்தைகளுக்கு பேனா, பென்சில், ரப்பர், சார்ப்னர், ஸ்கேல் அடங்கிய பவுச் - 30
தலா ஒரு குடும்பத்திற்கு மேற்கண்ட ரூ.1300/- மதிப்புள்ள பொருட்கள் வழங்கப்பட்டது. பள்ளி குழந்தைகள் மற்றும் ஊர் பொது மக்களுக்கு அய்யா அவர்கள் சார்பில் தீபாவளி வாழ்த்துக்கள் கூறி விழா இனிதே நடைபெற்று முடிந்தது.


No comments:
Post a Comment